• Sat. Sep 23rd, 2023

ஐ.சி.சி டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசை- டாப் 10ல் இந்திய வீரர்கள்!

Jan 5, 2022

சர்வதேச கிரிக்கெட் சங்கம்(ஐ.சி.சி) இன்று டெஸ்ட் கிரிக்கெட்டின் பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்த தரவரிசை பட்டியலில், இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின் இரண்டாம் இடம் பிடித்து அசத்தி உள்ளார்.

அதேபோல, ஜஸ்பிரித் பும்ரா 9-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். தென் ஆப்பிரிக்காவின் கஜிசோ ரபாடா 6-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.

ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹாசில்வுட் ஒரு இடம் சறுக்கி 7-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

அதேபோல, மிட்செல் ஸ்டார்க் ஒரு இடம் சறுக்கி 10-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இந்த தரவரிசையில் ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் முதலிடத்தில் நீடிக்கிறார்.