இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் இன்று பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது.
இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலையில் உள்ளது.
இந்த நிலையில் 2வது டெஸ்ட் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று மதியம் 2.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்த போட்டியினை இந்தியா டிரா செய்தாலே தொடரை கைப்பற்றி விடும்.
இருந்தாலும் இலங்கை அணியை ஒயிட்வாஷ் செய்யும் முயற்சியில் இந்திய அணியினர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.