• Sun. Oct 1st, 2023

சவுரவ் கங்குலி தொடர்பில் மருத்துவமனை வெளியிட்ட தகவல்

Dec 29, 2021

பிசிசிஐ தலைவரும் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனுமான சவுரவ் கங்குலிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, கொல்கத்தாவில் உள்ள உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் கங்குலி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கங்குலியின் உடல் நிலை பற்றி இன்று மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், கங்குலி உடல் நிலை சீராக உள்ளது. நேற்று இரவு நன்றாக தூங்கியதாகவும், காலை உணவு மற்றும் மத்திய உணவை எடுத்துக்கொண்டார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.