• Fri. Jun 2nd, 2023

இரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ள கோலி தம்பதியினர்

Jan 24, 2022

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மகள் வாமிகாவின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாவது குறித்து விராட் கோலி தம்பதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலியும், நடிகை அனுஷ்கா சர்மாவும் நீண்ட காலமாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு கடந்த ஆண்டு பெண் குழந்தை பிறந்த நிலையில் அந்த குழந்தைக்கு வாமிகா என பெயர் வைத்திருந்தனர். ஆனால் குழந்தை பிறந்தது முதலாக குழந்தையின் புகைப்படம் எதையும் தம்பதியினர் பகிரவில்லை.

இந்நிலையில் நேற்று குழந்தையுடன் கிரிக்கெட் மைதானத்திற்கு அனுஷ்கா வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வேகமாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து வேண்டுகோள் விடுத்துள்ள கோலி தம்பதியினர், மைதானத்தில் தாங்கள் அறியாமலே அந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை ரசிகர்கள் ஷேர் செய்ய வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.