• Tue. Mar 26th, 2024

அதிகாரப்பூர்வமாக வெளியேறினார் மெஸ்ஸி

Aug 10, 2021

கடந்த 21 ஆண்டுகளாக பார்சிலோனா அணிக்காக விளையாடி வந்த உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் மெஸ்ஸி அந்த அணியில் இருந்து விலகி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது மெஸ்ஸில் தன் தாய் வீடு போன்ற கிளப்பை விட்டு வெளியாறுவதற்கு கதறி அழுதார். இது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பார்சிலோனா அணியின் நிர்வாகம் நிதி நெருங்கடியில் சிக்கியுள்ளதாக மிகப்பெரிய அளவில் மெஸ்ஸிக்குச் சம்பளம் கொடுக்க முடியாத நிலையில் இருப்பதாக வெளிப்படையாகவே கூறியது. இதையே மெஸ்ஸியும் கூறி, அந்த அணியில் இருந்து வெளியேறுவது குறித்து வேதனை தெரிவித்தார்.

இந்நிலையில், 15 வயதில் இருந்து பார்சிலோனா அணியில் விளையாடி வரும் நிலையில் திடீரென்று அங்கிருந்து வெளியேறிய நட்சத்திர கால்பந்து வீரர் மெஸ்ஸி, நெய்மர் விளையாடி வரும் பிரபல கால்பந்து அணியான பிஎஸ்ஜி யுடன் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
இன்று பார்சிலோனா கால்பந்து கிளப்பில் இருந்து அவர் வெளியேறியபோது, செய்தியாளர்கள் சந்திப்பில் உலகில் தலைசிறந்த வீரர் மெஸ்ஸி கதறி அழுதார். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

எதிர்காலத்தில் பார்சிலோனா கிளப்பில் மீண்டும் நிதிநிலைமை சீரானால் மெஸ்ஸி திரும்பவும் அந்த கிளப் அணிக்குத் திரும்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.