• Thu. Nov 30th, 2023

2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டி!

Aug 11, 2021

வரும் 2028 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டிகளைச் சேர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஐசிசி கவுன்சில் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது.

இதில், அத்லெட்டிக், டென்னிஸ், டேபிள் டென்னிஸ், பேட்மிண்டன்,துப்பாக்கிசுடுதல், உள்ளிட்ட விளையாட்டுகள் இடம்பெற்றுள்ளன.ஆனால் கடைசியாக
ஒலிம்பிக்கில் கிரிக்கெட் கடந்த 1900 ஆம் ஆண்டு இடம்பெற்றது.

இந்நிலையில் தற்போது மீண்டும் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க வேண்டுமென ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது குறித்த பரிசீலித்த ஐசிசி கவுன்சில், வரும் 2028 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டை சேர்க்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.