ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியாவில் இருந்து நூற்றுக்கணக்கானோர் கலந்து கொள்ள சென்ற நிலையில் தற்போது ஒரே ஒரு வெள்ளிப் பதக்கம் கிடைத்திருந்தாலும் இன்னும் ஒரு சில பதக்கங்கள் கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
ஏற்கனவே பிவி சிந்து, தீபிகா குமாரி, பூஜா ராணி, மேரிகோம் உள்பட ஒருசில வீராங்கனைகள் பதக்கத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்திய ஹாக்கி அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. இன்று நடைபெற்ற அர்ஜென்டினா அணிக்கு எதிரான பரபரப்பான போட்டியில் இந்திய அணி கடைசி மூன்று நிமிடங்களில் அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்து வெற்றி பெற்றது.
இதனையடுத்து இந்திய அணி 3 – 1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணியை வீழ்த்தி உள்ளது.
இந்தியாவின் விவேக் பிரசாத், வருண்குமார் , ஹர்மன்ப்ரீத் சிங் ஆகியோர் அபாரமாக ஆடி கோல் அடித்தனர்.
இந்திய ஹாக்கி அணியின் இந்த வெற்றியின் மூலம் இந்தியா காலிறுதிக்கு முன்னேறியுள்ளது என்பதும், இந்திய அணிக்கு பதக்கம் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.