• Sun. Oct 1st, 2023

மன்னிப்பு கேட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்

Oct 27, 2021

பிரபல பாகிஸ்தான் வீரர் வக்கார் யூனுஸ் பகிரங்கமாக தனது முந்தைய கருத்துக்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.

சமீபத்தில் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தற்போது நடந்து வருகிறது. இதில், இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே சமீபத்தில் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

அப்போது பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான் நமாஸ் செய்வது பற்றி முன்னாள் வீரர் வாக்கர் யூனிஸ் கருத்துத் தெரிவித்தார்.

இதற்குப் பலரும் எதிர்ப்புகள் தெரிவித்தனர். இதையடுத்து, வக்கார் யூனிஸ் மன்னிப்புக் கேட்டுள்ளார். அதில், இனம், நிறம், மதம் ஆகியவற்றை தாண்டி மக்களை இணைப்பது விளையாட்டு என அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.