• Fri. Nov 1st, 2024

உலகக் கோப்பை டி20 – நமீபியா வெற்றி

Oct 28, 2021

உலகக் கோப்பை டி20 கிரிக்கெட்டில் நேற்று ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் நமீபியா வெற்றி பெற்றுள்ளது.

நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி , 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்து நமீபியாவுக்கு 110 ரன்கள் இலக்கான நிர்ணயித்தது.

இதையடுத்துக் களமிறங்கிய நமீபியா அணி 19.1 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.