டோக்கியோவில் நாள் ஒன்றிற்கு 4,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவதால் ஜப்பானில் ஒலிம்பிக் போட்டியை ரத்து செய்யக் கோரி போராட்டம் இடம்பெறுகிறது.
கொரோனா பிரச்சினைகளுக்கு இடையிலும் திட்டமிட்டபடி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி நடந்து வருகிறது. இதற்காக உலகம் முழுவதிலுமிருந்து பல ஆயிரம் வீரர்கள் ஜப்பான் சென்று போட்டியில் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் டோக்கியோவில் நாள் ஒன்றிற்கு 4,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவதால் ஜப்பானில் ஒலிம்பிக் போட்டியை ரத்து செய்யக் கோரி டோக்கியோ நகர வீதிகளில் தடையை மீறி மக்கள் போராட்டம் வருகின்றனர்.
டோக்கியோ நகர வீதிகளில் மக்கள் ஒலிம்பிக்கிற்கு எதிராக பேரணி நடத்தி எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
நடந்த போட்டிகளை விட்டு விட்டு மீதமுள்ள ஒலிம்பிக் போட்டிகளையாவது ரத்து செய்து கொரோனா ஆபத்தில் இருந்து நகரத்தை காக்க வேண்டும் என கோஷங்களையும் எழுப்பினர்.