• Sun. Dec 10th, 2023

பளு தூக்குதலில் இலங்கைக்கு தங்கப் பதக்கம்!

Dec 9, 2021

பளு தூக்குதலில் இலங்கைக்கு தங்கப் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார் ஸ்ரீமாலி சமரக்கோன்.

உஸ்பெகிஸ்தானில் இன்று இடம்பெற்ற பொதுநலவாய பளு தூக்குதல் போட்டியில் பெண்களுக்கான 45 கிலோ கிராம் எடைப் பிரிவில் ஸ்ரீமாலி சமரகோன் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

ஸ்ரீமாலி சமரக்கோன் கண்டி மகாமாயா பாலிகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.