• Thu. Apr 18th, 2024

சூர்யகுமார் யாதவை கதிகலங்க வைத்த மூன்றாவது நடுவர்!

Jul 23, 2021

இந்திய-இலங்கை அணிகளுக்கு இடையிலான இன்றைய முன்றாவது ஒருநாள் ஆட்டத்தில், ஐந்து புதிய இளம் வீரர்களை களமிறக்கியுள்ள இந்திய அணி, டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

இந்திய அணியின் தொடக்க வீரர் பிரிதிவ் ஷா 49 ரன்கள் எடுத்த போது சனகா வீசிய பந்தில் எல்பிடபல்யூ கொடுத்து தனது விக்கெட்டை இழந்தார். ஷிகர் தவான் 13 ரன்கள் எடுத்த போது சமீரா பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை இழந்தார்.

இதனையடுத்து, இன்று சர்வதேச ஒருநாள் போட்டியில் அறிமுகமாகியுள்ள அதிரடி மன்னன் சஞ்சு சாம்சன், 46 பந்துகளில் 46 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் ஒரு சிக்சர் அடங்கும்.

இந்நிலையில், ஆட்டத்தின் 23 ஓவரின் முதல் பந்தை ஓவரை ஜெயவிக்ரமா வீச, அதனை சூரியகுமார் யாதவ் எதிர்கொண்டார். இதன்போது பந்து பேட்டில் படாமல் காலில் பட்டதால் சூர்யகுமார் யாதவுக்கு எல்.பி.டபிள்யூ விக்கெட் வழங்கப்பட்டது.

இதனையடுத்து, சூரியகுமார் யாதவ் தனது விக்கெட் குறித்து, மூன்றாவது நடுவரிடம் முறையிட்டார். மூன்றாவது நடுவர் நீண்ட நேரம் எடுத்து கொண்டார். கிரிக்கெட் வரலாற்றில் மூன்றாவது நடுவர் இவ்வளவு நேரம் எடுத்து கொண்டது இதுவே முதல முறை.

இறுதியாக, மூன்றாவது நடுவர், பந்து பிட்ச் ஆகும் இடம் அவுட்-சைடு இருப்பதை காரணம் காட்டி விக்கெட் இல்லை என தெரிவித்தார். இந்நிலையில் வெகு நேரமாக தான் அவுட்டா இல்லையா என்று கதிகலங்கி நின்ற சூர்யகுமார் யாதவ் நிம்மதி பெரும் மூச்சு விட்டார்.

ஆனால் அதற்குள் மழை குறிக்கிடவே ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்போதுவரை இந்திய அணி 23 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்துள்ளதுடன் களத்தில் சூரியகுமார் 22 ரன்களுடனும், மனிஷ் பாண்டே 10 ரன்களுடனும் உள்ளனர்.