• Sat. Apr 13th, 2024

டி20 கிரிக்கெட் தொடர் : அதிகாரப்பூர்வ தேதியை வெளியிட்ட ஐசிசி

Jun 29, 2021

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடக்கும் என ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா 2ம் அலை வேகமாக பரவி, தற்போது குறைந்துவிட்டது. கொரோனா அச்சுறுத்தலால் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகளை செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 15 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துகிறது பிசிசிஐ.
அக்டோபர் 18ம் தேதி டி20 உலக கோப்பை இந்தியாவில் தொடங்குவதாக ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்தது.

எனிமும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக டி20 உலக கோப்பை இந்தியாவில் நடத்த முடியாத சூழல் உள்ளது. கொரோனா 2ம் அலை கட்டுக்குள் வந்துவிட்டாலும் கூட, முன்னெச்சரிக்கை கருதி டி20 உலக கோப்பையை இந்தியாவில் நடத்தாமல் இருப்பது நல்லது.

இந்தியாவில் கொரோனா குறைந்துவந்த நிலையில், டி20 உலக கோப்பையை இந்தியாவில் நடத்துவது குறித்து முடிவெடுக்க பிசிசிஐ ஜூன் கடைசி வாரம் வரை அவகாசம் கோரியது .

இதையடுத்து, நேற்று டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடத்தப்படும் என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்தார்.

இந்த நிலையில், இதனை ஏற்றுக் கொண்ட ஐசிசி, டி20 உலகக்கோப்பை நடக்கும் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதன்படி, அக்டோபர் 17ம் தேதி முதல் நவம்பர் 14ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் போட்டிகள் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் போட்டி அட்டவணை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.