• Fri. Jun 2nd, 2023

சர்ச்சையில் சிக்கிய இலங்கை கிரிக்கெட் வீரர்கள் அதிரடியாக நீக்கம்

Jun 28, 2021

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களான குசல் மென்டீஸ், தனுஷ்க குணதிலக்க மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகியோர் உடன் அமுலுக்குவரும் வகையில், இலங்கை கிரிக்கெட் அணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

ஶ்ரீலங்கா கிரிக்கெட்டின் செயலாளர் மொஹன் டி சில்வா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த வீரர்கள் மூவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு (27) டர்ஹாம் வீதிகளில் சுற்றித் திரிவதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து இந்த இடைநீக்கம் வந்துள்ளது.

இவர்களுடன் தனுஷ்க குணதிலக்கவும் உடனிருந்தாகவும் கூறப்படுகிறது.

இதேவ‍ேளை கிரிக்கெட் வீரர்கள் ஹோட்டல் ஊரடங்கு உத்தரவை மீறியுள்ளார்களா என்பதை அறிய இலங்கை கிரிக்கெட் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

மேலும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளியின் நம்பகத்தன்மையை சரிபார்த்த பின்னர், வீரர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால் அவர்கள் மீது கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.