பரபரப்பாக நடந்து வரும் யூரோ 2020 உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் கால் இறுதி போட்டிகள் முடிவடைந்த நிலையில் அரையிறுதி போட்டிகள் ஆரம்பமாகவுள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் யூரோ உலகக்கோப்பை கால்பந்து போட்டி கடந்த ஆண்டு நடைபெற்றிருக்க வேண்டிய நிலையில் கொரோனா காரணமாக இந்த ஆண்டில் நடைபெற்று வருகிறது.
26 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் பல்வேறு கட்ட ஆட்டங்களுக்கு பிறகு கால் இறுதி போட்டிகள் முடிவடைந்துள்ளன.
கால் இறுதி போட்டியில் வெற்றிபெற்ற 4 அணிகள் அரையிறுதியில் மோதிக் கொள்கின்றன. அதன்படி இத்தாலி – ஸ்பெயின் ஆகிய அணிகளுக்கான அரையிறுதி போட்டி முதலாவதாகவும் மற்றும் இங்கிலாந்து – டென்மார்க் இடையேயான அரையிறுதி போட்டி பின்னரும் வெம்பிலி விளையாட்டு அரங்கத்தில் (Wembley Stadium) நடைபெற உள்ளன.
அரையிறுதி போட்டிகளில் வெற்றி பெறும் இரு அணிகள் இறுதி போட்டியில் மோதிக் கொள்ள உள்ளன.