ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சமீபத்தில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றது. இந்த நிலையில் இன்று மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டி டோக்கியோவில் தொடங்குகிறது.
4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒலிம்பிக் போட்டிகள் முடிந்ததும் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு 16வது பாரா ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. இன்று தொடங்கும் இந்த போட்டி செப்டம்பர் 5ஆம் தேதி வரை நடைபெறும் என்பதும் 164 மூன்று நாடுகளை சேர்ந்த 4500 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.