ஐபிஎல் போட்டிகள் புதிதாக இரண்டு அணிகள் களமிறங்கியுள்ள நிலையில் இந்த இரண்டு அணிகளுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
இது குறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஐபிஎல் அணிகளை ஏலம் எடுக்க தகுதியான நிறுவனங்கள் 10 லட்ச ரூபாய் முன்பணம் கட்ட வேண்டும் என்றும் இந்த பணம் திரும்பி அளிக்கப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது.
அக்டோபர் ஐந்தாம் தேதிக்குள் ஐபிஎல் அணியை வாங்க விண்ணப்பிக்க வேண்டும் என்றும், ஏலம் எடுக்கும் அணியின் அடிப்படை விலை 2,000 கோடி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடிப்படை விலை 2,000 கோடியாக இருந்தாலும் குறைந்தபட்சம் ரூபாய் 3500 கோடியிலிருந்து 5000 கோடி வரை அணிகள் விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இரண்டு அணிகளை வாங்குவதற்கு அதானி நிறுவனம், கோயங்கா நிறுவனம், முத்தூட் பைனான்ஸ் நிறுவனம் ஆகியவை போட்டி போட்டு வருவதாக கூறப்படுகிறது.