• Wed. Dec 4th, 2024

டி20 தர வரிசையில் விராட் கோலி பின்னடைவு

Mar 3, 2022

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 போட்டிகளுக்கான வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று(02) வெளியிட்டது.

இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் 27 இடங்கள் முன்னேறி 18-வது இடத்தை பிடித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான தொடரில் 3 ஆட்டங்களிலும் அவர் அரைசதம் அடித்ததால் தர வரிசையில் அவர் முன்னேற்றம் கண்டுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு டி20 தர வரிசையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவர் 5 இடங்கள் சரிந்து 15-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இதே போல் இந்தியாவின் லோகேஷ் ராகுல் 4 இடம் குறைந்து 10-வது இடத்துக்கு பின்தங்கினார்.

ரோகித் சர்மா 13-வது இடத்தில் உள்ளார். பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலிடத்தில் தொடருகிறார். பந்து வீச்சாளர்கள் பட்டியலில் இந்திய வேக பந்து வீச்சாளர் புவனேஷ்குமார் மூன்று இடங்கள் முன்னேறி 17வது இடத்தை பிடித்தார்.