விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இதில், இரு அணிகளும் மோதிய முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெறது.
அப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை 113 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது. இந்திய அணியின் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணியின் கேட்பன் விராட் கோலியையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், செஞ்சூரியன் வெற்றியை தொடர்ந்து உலகின் சிறந்த கேப்டன் விராட் கோலி என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் வினோத் காம்ப்ளி புகழாரம் சூட்டியுள்ளார்.
இது தொடர்பாக வினோத் காம்ப்ளி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கேப்டன்சி-யை மாற்றுவது குறித்து பேச்சு உள்ளது. வானிலையும் நமக்கு எதிராக உள்ளது.
ஆனால், நாங்கள் என்ன செய்தோம் என்று பாருங்கள்… நாங்கள் அற்புதங்களை நிகழ்த்தினோம். உலகின் சிறந்த கேப்டனாக ஏன் உள்ளார் என்பதை விராட் கோலி நிருபித்துள்ளார்.
பேட்டிங்கை பொறுத்தவரை இந்த தொடர் (தென் ஆப்பிரிக்கா தொடர்) பழைய விராட் கோலியை மீண்டும் கொண்டு வரும்’ என்றார்.