• Thu. Jan 2nd, 2025

இலங்கையில் குழந்தைகளுக்கு பரவும் புதிய நோய்

Jun 20, 2021

குழந்தைகளுக்கு மல்ரிசிஸ்டம் அழற்சி நோய்(Multisystem inflammatory) நாடு முழுவதும் பரவி வருவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அவதானமாக கவனித்துக்கொள்ளுமாறு அவர்கள் மேலும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த புதிய நோய் முதன்முதலில் இங்கிலாந்தில் 2020 ஆம் ஆண்டில் பதிவாகியதாக லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் குழந்தை மருத்துவ நிபுணர் Dr.நலின் கிதுல்வட்டா தெரிவித்தார்.

இந்த நோய் COVID-19 உடன் தொடர்புடையது என்றும், COVID-19 நோயால் பாதிக்கப்பட்ட இரண்டு முதல் ஆறு வாரங்களுக்குப் பிறகு குழந்தைகளுக்கு இந்த நோயால் பாதிக்கப்படலாம் என்றும் சுட்டிக்காட்டினார்.

நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு காய்ச்சல், வயிற்று வலி, கூடுதல் சோர்வு, வாந்தி, வயிற்றுப்போக்கு, இரத்தக் கண்கள் மற்றும் தோல் சொறி போன்ற அறிகுறிகள் உருவாகலாம் என்று வைத்தியர் கூறினார்.

இது இரத்த அழுத்தத்தைக் குறைப்பதன் மூலம் மேலும் கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்றும் இதனால் இதயத்தை பாதிக்கும் என்றும். இது கூட ஆபத்தானது என்று அவர் கூறினார். லேடி ரிட்ஜ்வே வைத்திய சாலையில் அவசர சிகிச்சை பிரிவில் இந்த நோயால் பாதிக்கப்பட்ட ஆறு குழந்தைகள் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியர் கிதுல்வட்டா தெரிவித்தார்.