• Wed. Feb 5th, 2025

நடிகர் அமர சிகாமணி காலமானார்

Jun 22, 2021

திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை தொடர்களில் நடித்த நடிகர் அமர சிகாமணி மாரடைப்பால் காலமானார்.

சினிமா, சின்னத்திரை தொடர்களில் குணச்சித்ர வேடங்களில் நடித்தவர் அமர சிகாமணி (74). கவிஞராகவும் அறியப்பட்ட இவருக்கு திடீரென இரவு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று (ஜூன் 21) அதிகாலை உயிரிழந்தார். இவரது மறைவுக்கு சின்னத்திரை கலைஞர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இவருக்கு சியாமளா தேவி என்ற மனைவியும், 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.