• Thu. Jan 16th, 2025

நடிகர் விஜய்யின் வீட்டுக்கு முன் ரசிகர்கள் திடீர் போராட்டம்!

Jun 22, 2021

நடிகர் விஜய்யின் பிறந்த நாளான இன்று வாழ்த்து தெரிவிப்பதற்கு விஜய் வீட்டில் இருந்து வெளியில் வரவேண்டும் என கோரிக்கை விடுத்து ரசிகர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டடுள்ளனர்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் விஜய், இன்று தனது 47ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதைமுன்னிட்டு அவர் தற்போது நடித்துவரும் ‘பீஸ்ட்’ படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன.

இந்த இரண்டு போஸ்டர்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததோடு, சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் விஜய்க்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகர் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்க அவரது வீட்டு முன் இன்று ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். அவர்கள் திடீர் என நடிகர் விஜய் வீட்டில் இருந்து வெளியில் வந்து தங்களைப் பார்க்க கோரிக்கை விடுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து தர்ணாவில் ஈடுபட்ட விஜய் ரசிகர்களை பொலிஸார் அப்புறப்படுத்தியுள்ளதாகவும் கூறப்பட்டுகின்றது.