• Fri. Nov 22nd, 2024

உலகளவில் 18.29 கோடி பேர் பாதிப்பு

Jul 1, 2021

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 18.29 கோடியாக அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதும் 182,961,096 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 3,962,366 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 167,543,574 பேர் மீண்டனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் 11,455,156 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன.

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34,543,364 என அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 620,226 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 29,025,590 என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரேசில் நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 18,559,164 என அதிகரித்துள்ளது. பிரேசில் நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 518,246 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 16,858,632 என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 30,410,577 என அதிகரித்துள்ளது. இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 399,475 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 29,481,522 என்பதும் குறிப்பிடத்தக்கது.