![](https://tamil4.com/wp-content/uploads/2021/07/phillipines-1.jpg)
பிலிப்பைன்ஸ் நாட்டில் தால் எரிமலை வெடித்து சிதறியதில் அந்த இடமே சாம்பல் சூழ்ந்த பகுதியாக காட்சி அளித்தது. பிலிப்பைன்ஸில் பல எரிமலைகள் உள்ளன.
அதில் தால் ஏரியில் உள்ள எரிமலை வெடித்து சிதறியதால் வெளியேறிய சாம்பல் காரணமாக மணிலா உள்ளிட்ட பகுதிகள் புகை மண்டலமாக காட்சி அளித்தது. சுமார் 5 நிமிடங்கள் இந்த எரிமலை வெடிப்பு நிகழ்ந்துள்ளது.
இதேவேளை முன்னதாக அப்பகுதியின் அருகே வசிக்கும் 14 ஆயிரம் பேர் பத்திரமாக தலைநகர் மணிலாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என தெரியவருகின்றது.