• Fri. Nov 22nd, 2024

இந்தியாவில் மூன்றாம் அலைக்கான எச்சரிக்கை – தளர்வுகள் திரும்பப் பெறப்படும்

Jul 7, 2021

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை குறைந்த போதிலும், மூன்றாம் அலைக்கான எச்சரிக்கை இருப்பதால் அனைத்து மாநிலங்களும் தளர்வுகள் அளிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என மத்திய அரசு ஏற்கெனவே தெரிவித்திருந்தது.

இந்நிலையில், கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் மக்கள் நடமாட்டம் இருப்பதாக சுகாதாரத்துறையின் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லவ் அகர்வால் கூறியதாவது;

“நாட்டில் கொரோனாவால் சிகிச்சைப் பெற்று வருவோரின் எண்ணிக்கை 5 லட்சத்திற்கும் குறைவாக உள்ளது. மகாராஷ்டிரம், தமிழ்நாடு, ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் மட்டுமே 10 சதவீதத்திற்கும் அதிகமான பாதிப்பு விகிதம் பதிவாகி வருகிறது.

இன்னும் சில பகுதிகளில் இரண்டாம் அலை குறையவில்லை. மலைப் பிரதேசங்களுக்கு செல்லும் மக்கள் கொரோனா நெறிமுறைகளை பின்பற்றுவதில்லை. கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றவில்லை என்றால் தளர்வுகள் திரும்பப் பெறப்படும்” என்றார்.