• Tue. Oct 15th, 2024

கொரோனா நோய்த்தொற்று முற்றிலும் தணித்து விடவில்லை – WHO

Jul 12, 2021

உலகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல் படுத்தப்படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அதன் பலனாக பெரும்பாலான இடங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.

இந்நிலையில் கொரோனா நோய்த்தொற்று முற்றிலும் தணித்து விடவில்லை என்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி இயக்கத்தால் சில நாடுகளில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது. பல்வேறு நாடுகளின் அரசுகள் கட்டுப்பாடுகளை தளர்த்தும் வேலையில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.