• Tue. Feb 4th, 2025

இலங்கையில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கட்டாய இராணுவ பயிற்சி

Jul 16, 2021

18 வயதுக்கும் அதிக வயதுடையவர்களுக்கு இராணுவ முகாமிற்குள் இராணுவப் பயிற்சி அளிக்க வேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசெகர மீண்டும் தெரிவித்துள்ளார்.

பாணந்துறை – அடுபோமுல்ல மற்றும் ஹிரண பொலிஸ் நிலையத்தை இன்று திறந்துவைத்து உரையாற்றியபோது அவர் இதனைக் கூறினார்.

ஒழுக்கமுள்ள சமூகத்தை ஏற்படுத்துவதற்காக இராணுவப் பயிற்சி அளிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் நாட்டில் தற்சமயம் ஒழுக்கம் சீர்கேட்டு நிலையை அடைந்திருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சர் இதன்போது மேலும் கூறினார்.