• Fri. Nov 22nd, 2024

பிரித்தானிய அரசின் திடீர் முடிவு!

Jul 19, 2021

பிரித்தானியர்கள் பலர் தனிமைப்படுத்துதல் மற்றும் அபராதம் போன்றவற்றில் இருந்து தப்பிப்பதற்காக, நாட்டிற்கு வேகமாக திரும்பி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகின் பிரபல Spanish தீவுகள் இன்று(19) அதிகாலை 4 மணி வரை மட்டுமே பச்சை நிற நாடுகளுக்கான பட்டியலில் இருக்கும், அதன் பின் அது Amber நாடுகளின் பட்டியலில் சேர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Amber நாடுகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டால், அங்கிருந்து வருபவர்கள், 10 நாட்களுக்கு வீட்டிற்குள்ளே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இரண்டு கொரோனா பரிசோதனைக்கு பணம் செலுத்த வேண்டும்.

பயணங்களின் போது கொரோனா நெகடிவ்விற்கான சோதனை சான்றிதழை காட்ட வேண்டும் போன்ற நிபந்தனைகள் உள்ளது. அதன் படி Amber நாடுகளின் பட்டியலில் இருந்து பிரித்தானியாவிற்கு வருபவர்கள் 10 நாட்கள் வீட்டில் சுயதனிமைப்படுத்தப்படுவர், அல்லது அவர்களுக்கு 1000 பவுண்ட் அபராதம் விதிக்கப்படும்.

இதனால் குறித்த தீவுகளுக்கு விடுமுறைக்காக சென்ற பிரித்தானியார்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இது அவர்களின் திட்டங்களை சீர்குலைத்துள்ளது. சுற்றுலா சென்ற அவர்கள்(சுமார் அங்கிருக்கும் 100-க்கும் மேற்பட்டோர்) விதிக்கப்பட்டுள்ள குறித்த காலெக்கெடுவிற்குள் பிரித்தானியா வருவதற்கு முயற்சித்து வருகின்றனர்.

இதற்காக அங்கிருக்கும் விமானநிலையங்களில் பயணிகள் வருகை கூடிக் கொண்டே செல்வதாகவும், இதன் காரணமாக பிரித்தானியாவிற்கு பல விமானங்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அங்கிருக்கும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், பிரான்ஸில் இருந்து வருபவர்களுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று பிரித்தானியா அறிவித்துள்ளது. ஏனெனில் அங்கு தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட பீட்டா வகை கொரோனா வைரஸ் பரவல் அதிகம் உள்ளதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.