தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக இருந்துவரும் கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய நடிகையாக வலம் வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக மிஸ் இந்தியா மற்றும் பெண்குயின் ஆகிய இரண்டு திரைப்படங்களுமே OTT யில் வெளியாகி மாபெரும் வரவேற்பினைப் பெற்றது.
தற்போது இவர் ரஜினியின் அண்ணாத்த, சாணி காயிதம் போன்ற திரைப்படங்களில் நடித்துவருகிறார். மேலும் தெலுங்கில் ராங்க் டே, குட் லக் சகி, சர்க்காரு வாரி பட்டா போன்ற திரைப்படங்களில் நடித்துவருகிறார். அதேபோல் மலையாளத்தில் அரபிக் கடலின் சிங்கம், வாஷி போன்ற திரைப்படங்களிலும் நடித்துவருகிறார்.
படப்பிடிப்பு இல்லாத நாட்களில் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிடுவது கீர்த்தியின் வழக்கம். அந்தவகையில் தற்போது அவர் லாக்டவுனில் வீட்டிலேயே இருந்து ஆன்லைன் மூலம் யோகா பயிற்சிகளைச் செய்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது உடலை வளைத்து கடுமையான முயற்சிகளைப் போட்டு யோகா செய்யும் புகைப்படங்களை நடிகை கீர்த்தி சுரேஷ் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
கீர்த்தி சுரேஷின் கடுமையான யோகாப் பயிற்சிப் புகைப்படங்கள் குறித்து ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். மேலும் இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.