• Wed. Dec 18th, 2024

கேரளாவில் புதிதாக 18,531 பேருக்கு கொரோனா; திணறும் சுகாதாரத்துறை

Jul 24, 2021

இந்தியாவின் பிற பகுதிகளில் கொரோனாவின் 2-வது அலை தொடர்ந்து கட்டுக்குள் வந்து கொண்டிருக்க, கேரளாவில் மட்டும் தொற்று அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகள் எடுத்தபோதும், பாதிப்பு கட்டுக்குள் வர மறுப்பதால் அரசும், சுகாதாரத்துறையும் திணறி வருகின்றன.

இந்நிலையில், அங்கு ஒருநாளில் மட்டும் 18,531 பேருக்கு புதிதாக தொற்று பாதித்து உள்ளது. 98 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மாநிலத்தில் 1,38,124 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளதாக மாநில சுகாதார மந்திரி வீணா ஜார்ஜ் கூறியுள்ளார்.

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,969 தாண்டியது. இன்று ஒரே நாளில் 15,507 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.

இதனிடையே கேரளாவில் மேலும் இரண்டு பேருக்கு ஜிகா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம், மொத்த ஜிகா வைரசால் மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46 ஐ எட்டி உள்ளது. இவர்களில் ஐந்து பேர் சிகிச்சை பெற்று வருகின்றதாக கேரள சுகாதார மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.