• Wed. Jul 24th, 2024

பெட்ரோல் விலை அதிகரிப்பு குறித்து ராகுல் காந்தி ட்வீட்

Apr 4, 2022

ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தொடர்ந்து பெட்ரோல் விலை உயர்ந்து வருகிறது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100-ஐ தாண்டி விட்டது.

இந்த பெட்ரோல் விலையேற்றம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியபோது, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பத்தாண்டுகளுக்கும் மேலாக எண்ணெய் நிறுவனங்களுக்கு பாண்டுகளை வழங்கியதுதான் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்குக் காரணம்” எனக் குற்றம் சாட்டினார்.

கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், ”மோடி அரசு ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து கடந்த 8 ஆண்டுகளில் எரிபொருள் வரியாக 26,51,919 கோடி ரூபாய் வசூலித்துள்ளது” எனப் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மக்கள் நிதி திட்டம் (Pradhan Mantri Jan Dhan Yojana) என்பதை `பிரதமர் மக்கள் நிதி கொல்லை திட்டம் (Pradhan Mantri Jan Dhan LOOT Yojana)’ எனப் பதிவிட்டு 2014 -ல் பா.ஜ.க ஆட்சிக்கு வருவதற்கு முன்பும், தற்போதைய பெட்ரோல் விலை தொடர்பான புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். அந்தப் புகைப்படத்தில் வாகனத்தில் முழுமையாக (full tank) பெட்ரோல் நிரப்ப ஆகும் செலவு ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதில்…

பைக் – 2014-ல் ரூ.714 தற்போது ரூ.1,038 = ரூ.324 உயர்த்தப்பட்டுள்ளது.

கார் – 2014 -ல் ரூ.2,856 தற்போது ரூ.4,152 = ரூ.1,296 உயர்த்தப்பட்டுள்ளது.

டிராக்டர் – 2014-ல் ரூ.2,749 தற்போது ரூ.4,563 = ரூ.1,814 உயர்த்தப்பட்டுள்ளது.

லாரி – 2014-ல் ரூ.11,456 தற்போது ரூ.19,014 = ரூ.7,558 உயர்த்தப்பட்டுள்ளது.

எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.