வல்வெட்டித்துறை- ஊரிக்காடு மயானத்தில் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்ட பகுதியில் தங்க நகைகளைத் தேடி அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள், அடக்கம் செய்யப்பட்ட சடலம் ஒன்றில், தங்க நகை இருப்பதாக அகழ்வில் ஈடுபட்ட வேளையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகபர்களை, தடுப்பு காவலில் வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார், பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
மேலும் குறித்த சம்பவத்தை தொடர்ந்து ஊரிக்காடு மயானத்தித்திற்கு இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.