• Thu. Nov 21st, 2024

இந்தியாவில் மேலும் ஒரு தடுப்பூசிக்கு அனுமதி

Aug 20, 2021

இந்தியாவில் மேலும் ஒரு தடுப்பூசிக்கு மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

அவசர கால பயன்பாட்டிற்காக சைடஸ் கெடிலா நிறுவனத்தின் Zycov-D என்ற கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

ஏற்கனவே, பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின், சீரம் இன்ஸ்ட்டிடியூட் நிறுவனத்தின் கோவிஷீல்டு, ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி, அமெரிக்காவின் ஜான்சன் & ஜான்சன் ஆகிய தடுப்பூசிகளுக்கு இந்தியாவில் அவசர கால பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மேலும் ஒரு கொரோனா தடுப்பூசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாடு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

உலகிலேயே இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் டி.என்.ஏ தடுப்பூசி இதுவாகும். 12-வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு Zycov-D – மருந்தை பயன்படுத்தலாம் என இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.