• Thu. Jan 30th, 2025

money heist வெப் தொடரின் டிரைலர் ரிலீஸ்

Sep 3, 2021

நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ஒளிபரப்பாகும் மணி ஹெய்ஸ்ட் என்ற தொடர் ஏற்கனவே நான்கு பாகங்கள் வெளியாகி உள்ள நிலையில் இதன் டிரைலர் நேற்று வெளியாகி வைரலாகி வருகிறது.

மணி ஹெய்ஸ்ட் தொடரில் வரும் புரொபஸர் கேரக்டர் அனைவரையும் கவர்ந்தது என்பதும் தமிழ் திரை உலகில் உள்ள ரசிகர்கள் இந்த கேரக்டரை பார்த்து இதில் அஜீத் அல்லது விஜய் நடித்தால் நன்றாக இருக்கும் என்று வாதம் செய்து வந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் money heist சீரிஸின் சீஸன் 5 இன்று உலகம் முழுவதும் வெளியாகும் நிலையில், இதன் டிரைலர் நேற்று வெளியாகியுள்ளது. 15 நிமிட முன்னோட்டம் உள்ள காட்சிகள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.