கேரளாவில் இன்று ஒரே நாளில் 22,182 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இதன்மூலம் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 44,46,228 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவில் இருந்து 26,563 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை கேரளாவில் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 42,36,309 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 178 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். இதனால் கேரளாவில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 23,165 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது கொரோனா சிகிச்சையில் 1,86,190 பேர் உள்ளனர். 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 21 ஆயிரத்து 486 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில், பாதிப்பு விகிதம் 18.25 சதவீதமாக உள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.