• Wed. Feb 5th, 2025

மோடியின் பிறந்தநாளை வேலை இல்லா திண்டாட்ட நாளாக அறிவிப்பு

Sep 17, 2021

பிரதமர் மோடி இன்று தனது 71 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவரது பிறந்தநாளை வேலை இல்லா திண்டாட்டம் நாளாக அனுசரிக்க போவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரதமரின் பிறந்தநாள் தேசிய வேலையில்லா திண்டாட்ட நாள் என்றும், கோடிக்கணக்கான இளைஞர்களின் வேலையை பறித்த பிரதமருக்கு, அவருடைய பிறந்தநாளை வேலையில்லா திண்டாட்ட நாளாகக் கொண்டாடுவது மிக பொருத்தமாக இருக்கும் என்றும் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தான் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் கூறியபோது வேலையில்லாத் திண்டாட்டம் காரணமாக நாடு முழுவதும் 32 லட்சம் பேர் வேலையை இழந்து தவிக்கின்றனர். புதிய வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்படவில்லை.

பிரதமர் மோடியால் பெரு முதலாளிகள் தான் மேலும் செல்வங்களை பெருகி வருகின்றனர். இந்திய நாட்டு இளைஞர்களுக்கு நிரந்தரமான வேலை வாய்ப்பை மத்திய அரசு வழங்க வேண்டும் என்பதை குறிப்பதற்காகவே அவரது பிறந்தநாளை வேலையில்லா திண்டாட்டம் நாளாக அறிவித்து உள்ளோம் என்று கூறியுள்ளார்.