நேற்று ஜப்பான் நாட்டில் மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது என்பதும் ரிக்டர் அளவில் 6.1 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் அந்நாட்டு மக்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டது.
இந்நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி மியான்மரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 என பதிவாகி உள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை என்றாலும் அவர்கள் பெரிய அளவில் இல்லை என்பது மட்டும் முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது.
மேலும் மியான்மர் நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து வீடுகள் குலுங்கியதால் அந்நாட்டு மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்து பதறி ஓடிய காட்சியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.