• Fri. Nov 22nd, 2024

இந்தியாவில் மழை வெள்ளத்தில் சிக்கி 54 பேர் பலி

Oct 21, 2021

இந்தியாவில் உத்தராகண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கடும் மழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி 52 பேர் உயிரிழந்துள்ளனர்.

பல்வேறு சம்பவங்களில் மொத்தம் 19 பேர் காயமடைந்துள்ளனர். ஐந்து பேர் காணாமல் போயுள்ளனர்

பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு, வீதிகளில் பாறைகள் உருண்டு விழுந்துள்ளதால் போக்குவரத்து முடங்கியுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து 1,300 க்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளது.

சுற்றுலாத்தலமான நைனிடால் பகுதி மழையால் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது. அங்கு மட்டும் 28 பேர் உயிரிழந்துவிட்டனர்.

நிலச்சரிவு மற்றும் வெள்ளம் பாதித்த இடங்களிலிருந்து மேலும் 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதை அடுத்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது.

மழை தொடர்பான சம்பவங்களில், மலையேற்ற குழுவைச் சேர்ந்த 11 பேர் உள்ளிட்ட 16 பேர் காணாமல் போய்விட்டதாகவும், அவர்களை தேடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, உத்தரப்பிரதேசம், சிக்கிம், மற்றும் மேற்கு வங்கத்தின் சில பகுதிகளிலும் பலத்த மழை பொழிந்து வருகின்றது.

மழையால் சிக்கிமில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால், அங்குள்ள அதிவேக வீதி மூடப்பட்டு, நாட்டின் பிற பகுதிகளுடன் கேங்க்டாக் நகரை இணைக்கும் பகுதி துண்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அக்டோபர் 12 முதல் 20 வரை மழை மற்றும் நிலச்சரிவால் 42 பேர் உயிரிழந்துள்ளனர். ஆறு பேர் காணமால் போயுள்ளனர்.

ஒக்டோபர் 1 முதல் 19 வரையிலான காலகட்டத்தில் தென் மாநிலத்தில் 135 சதவீதம் அதிக மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது.