• Thu. Nov 21st, 2024

எரிபொருள் இறக்குமதிக்கு நீண்ட கால ஒப்பந்தம்

Oct 27, 2021

எட்டு மாதகாலத்திற்கான பெற்றோல் மற்றும் டீசலை இறக்குமதி செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தத்தை வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் நேற்று முன்தினம்(25) கூடிய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதன்பிரகாரம் இவ்விரு எரிபொருள்களும் 2022.01.01 தொடக்கம் 2022.08.31 வரையான எட்டு மாதகாலத்துக்கான இறக்குமதிக்கு நீண்டகால ஒப்பந்தம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

2022.01.01 தொடக்கம் 2022.08.31 வரையான எட்டு மாதகாலத்திற்கான டீசல் (உயர்ந்தபட்ச சல்பர் சதவீதம் 1,137,500 + 10/- 5% பீப்பாய்கள் மற்றும் டீசல் (உயர்ந்தபட்ச சல்பர் சதவீதம் 0.001) 262,500 + 10/- 5% பீப்பாய்களை இறக்குமதி செய்வதற்காக சிங்கப்பூர் M/s Vitol Asia Pte. Ltd நிறுவனத்திற்கு வழங்குவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பெற்றோல் இறக்குமதி
இதேவேளை, 2022.01.01 தொடக்கம் 2022.08.31 வரையான எட்டு மாத காலத்திற்கான பெற்றோல் (92 Unl) 1,341,000 + 10/- 5% பீப்பாய்கள் மற்றும் பெற்றோல்; (95 Unl) 459,000 +10/- 5% பீப்பாய்களை இறக்குமதி செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தத்தை வழங்குவதற்காக சிங்கப்பூர் M/s Vitol Asia Pte. Ltd நிறுவனத்திற்கு வழங்குவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது,

இவ்விரு யோசனைகளும் எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே சமர்ப்பித்துள்ளார். அவ்விரு யோசனைகளுக்குமே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.