• Thu. Nov 21st, 2024

வடகொரியாவில் உணவுப் பஞ்சம்; சாப்பிடுவதை குறையுங்கள்! கிம் உத்தரவு!

Oct 28, 2021

நாட்டு மக்களை 2025 ஆம் ஆண்டு வரை நாட்டு மக்கள் குறைவாக உண்ணும் பழக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும் என அதிரடி உத்தரவொன்றை வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் பிறப்பித்துள்ளமை உலக நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா அச்சுறுத்தலால் வட கொரியா தனது நாட்டுடனான வெளிநாட்டு எல்லைகளை மூடியுள்ளது. அதில் குறிப்பாக உணவுப் பொருட்கள், எரிபொருள் என மிகவும் அத்தியாவசியத் தேவைகளுக்காக சார்ந்திருந்த சீன எல்லையையும் கூட மூடியுள்ளது.

இதனால் அங்கு ஒரு கிலோ வாழைப்பழத்தின் 45 டொலர், 32 யூரோவாக இருக்கிறது. (இலங்கை ரூபாவில் 9,000, இந்திய ரூபாயின் 3,300) ஆகவும் உள்ளது.

இந்நிலையில், 2025 ஆம் ஆண்டு வரை நாட்டு மக்கள் குறைவாக உண்ணும் பழக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்ற கிம்மின் உத்தரவு மக்களை மேலும் வதைப்பது போல் உள்ளதாக உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.