• Tue. Sep 10th, 2024

இடுகாடுகளில் இடமில்லை – ரஷ்யாவின் அவல நிலை

Oct 29, 2021

ரஷ்யாவில் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய இடம் இல்லாமல் பல்வேறு நகரங்களில் இடுகாடு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கடந்த இரண்டு வருட காலமாக கொரோனா பரவி வரும் நிலையில் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் பல நாடுகளும் கொரொனா தடுப்பூசி செலுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில் ரஷ்யாவில் கடந்த சில நாட்களாக கொரோனா அதிகரித்து வருகிறது தினசரி பாதிப்பு 40 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. தற்போது சீனாவிலும் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ரஷ்யாவிலும் அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே ரஷ்யாவில் இதுவரை நடந்திராத வகையில் கடந்த ஒருநாளில் மட்டும் 1,159 பேர் கொரோனாவால் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் ஒரே வாகனத்தில் 2 அல்லது 3 சடங்களை ஏற்றி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.