• Wed. Feb 5th, 2025

அரசாங்கத்தையே ஏமாற்றிய செல்வந்தர்கள் – அடேங்கப்பா!

Jun 10, 2021

அமெரிக்காவில் மிகப்பெரும் செல்வந்தர்களான ஜெப் பெசோஸ் உள்ளிட்ட பலர் பல ஆண்டுகளாக முறையாக வருமான வரி கட்டாமல் அரசை ஏமாற்றியுள்ளதாக வெளியாகியுள்ள பத்திரிக்கை செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் தன்னார்வல பத்திரிக்கை நிறுவனமான புரோபப்ளிக்கா வெளியிட்டுள்ள தகவலின்படி, பிரபல அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் 2007 முதல் 2011 வரை வருமான வரி செலுத்தவில்லை என்றும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் கடந்த 2018ம் ஆண்டு முழுவதும் வரி செலுத்தவில்லை என்றும், இதுபோல சுமார் 25க்கும் அதிகமான செல்வந்தர்கள் வரி செலுத்தாத விவரங்களையும் புரோபப்ளிகா வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் அரசாங்க தகவல்களை முறைகேடாக இதுபோன்று பொதுவெளியில் பகிர்தல் தவறு என பத்திரிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க வெள்ளை மாளிகை, இதுகுறித்த விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது.