• Thu. Jan 2nd, 2025

இலங்கையில் 17 மாவட்டங்கள் பாதிப்பு

Nov 11, 2021

இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 17 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக 25 பேர் மரணித்துள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளார். 76 மத்திய நிலையங்களில் 12 ஆயிரத்து 470 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சீரற்ற காலநிலை காரணமாக 60 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்த நிலையம் அறிவித்துள்ளது.

இதேவேளை, மரம் ஒன்று முறிந்து விழுந்ததனால் ரம்புக்கணை வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. அதேபோல், கொழும்பு, குருநாகல் வீதியின் கொட்டதெனிய பிரதேசம் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.