சிங்கப்பூரில் கொரோனா குறைந்து வருவதால், அடுத்த வாரம் முதல் தளர்வுகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
இதுகுறித்து சிங்கப்பூர் ஊடகங்கள் செய்தி வெளியிடுகையில்,
“சிங்கப்பூரில் ஊரடங்கு ஜூன் 14 தேதி முதல் முடிவடைகிறது. கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இதன் காரணமாக அடுத்த வாரம் முதல் தளர்வுகளை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
இந்த தளர்வுகள் இரண்டு கட்டங்களாக வெளியிடப்படும். தளர்வுகளில் நேரடி நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளுக்கும் அனுமதி அளிக்கப்பட உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவிற்கு, கடந்த மாதம் கொரோனா தொற்று அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து கட்டுப்பாடுகளை அறிவித்த பின்னர் தற்போது கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது.
இந்நிலையில் இதுவரை சிங்கப்பூரில் 60,000 அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 30 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.