• Thu. Nov 21st, 2024

இந்தியாவில் பீதி; தென்ஆப்பிரிக்காவில் இருந்து திரும்பிய பலர் தலைமறைவு!

Dec 3, 2021

தென்ஆப்பிரிக்காவில் பரவ தொடங்கிய ஒமைக்ரான் வைரஸ் தற்போது 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.

அந்தவகையில் இந்தியாவில் அதாவது பெங்களூருவில் 2 பேருக்கு அந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டது.

இதையடுத்து தென்ஆப்பிரிக்காவில் இருந்து கடந்த 15 நாட்களில் 70-க்கும் மேற்பட்டவர்கள் பெங்களூரு வந்துள்ளதாக கூறப்படுகின்றது

அவர்களின் முகவரி உள்ளிட்ட விவரங்களை பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் சேகரித்துள்ளனர். அதன்படி அவர்களின் சளி மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

எனினும் பலரது முகவரியில் போய் பார்த்தபோது அங்கு அவர்கள் இல்லை என்பது தெியவந்தது. இதனால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதோடு பயணிகள் கொடுத்துள்ள செல்போன் எண்ணும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.

ஒமைக்ரான் வைரஸ் பரவியுள்ள நிலையில் அவர்கள் தறைவாகியுள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் அவர்களை கண்டுபிடித்து பரிசோதனை நடத்த அதிகாரிகள் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

இதற்கிடையே, கர்நாடகாவில் ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட இரண்டு பேரில் ஒருவர் தலைமறைவு ஆகிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


மேலும் தனியார் ஆய்வகத்தில் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் பெற்ற பின்னர் தப்பியதாக மாநில அரசு தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.