• Thu. Dec 26th, 2024

18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி

Dec 8, 2021

இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்று பரவி வருகின்ற நிலையில், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து ஆலோசித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து மாநிலங்களவையில் அளிக்கப்பட்டுள்ள பதிலில், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக தேசிய நிபுணர் குழுவும், தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழுவும் ஆய்வு செய்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு கெடிலா ஹெல்த்கேர் நிறுவனம் தயாரித்த ஜைகோவ்-டி தடுப்பூசியை செலுத்துவது குறித்து இந்திய மருந்து தலைமை கட்டுப்பாட்டாளர் ஒப்புதலை பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.