• Sun. Dec 1st, 2024

கோரவிபத்தில் இந்திய முப்படைத்தளபதி பலி!

Dec 8, 2021

இந்திய இராணுவ ஹெலிகொப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியும் உயிரிழந்துள்ளதாக இந்திய விமானப்படை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இதேவேளை ஹெலிகொப்டரை செலுத்திய விமானி மட்டும் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாகத் தெரியவருகிறது.

இன்று மதியம் 12 மணியளவில், குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதையில் வானில் பறந்துகொண்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து குன்னூர் வெலிங்க்டன் பயிற்சி மையத்திற்கு சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்திருந்தது.

முக்கிய ஆலோசனைக்கூட்டத்திற்காக பல உயர் ராணுவ அதிகாரிகள் இதில் சென்றதாகக் கூறப்பட்ட நிலையில், அந்த ஹெலிகாப்டரில் முப்படைகளின் தலைமைத்தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி ஹெலிகாப்டரில் பயணித்துள்ளளனர்.

இந்த விமானத்தில் முக்கிய ராணுவ உயரதிகாரிகள் 14 பேர் பயணித்துள்ள நிலையில் அதில் 11 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.