• Sat. Nov 16th, 2024

அஸ்வின் இந்தியா உற்பத்தி செய்த ஆஃப் ஸ்பின்னர்களில் சிறந்த ஒருவராக இருக்கலாம், ஆனால்…….

Dec 22, 2021

அஸ்வின் இந்தியா உற்பத்தி செய்த ஆஃப் ஸ்பின்னர்களில் சிறந்த ஒருவராக இருக்கலாம், ஆனால் தென் ஆப்பிரிக்காவின் ஆடுகளத்தை சிறப்பாக ஒரு பவுலர் பயன்படுத்துவார் என்றால் அது ஜஸ்பிரித் பும்ராவாகவே இருக்கும் என்று தென் ஆப்பிரிக்காவின் டெஸ்ட் கேப்டன் டீன் எல்கர் தெரிவித்துள்ளார்.

அஸ்வின் இந்தியா உற்பத்தி செய்த ஆஃப் ஸ்பின்னர்களில் சிறந்த ஒருவராக இருக்கலாம், ஆனால் தென் ஆப்பிரிக்காவின் ஆடுகளத்தை சிறப்பாக ஒரு பவுலர் பயன்படுத்துவார் என்றால் அது ஜஸ்பிரித் பும்ராவாகவே இருக்கும் என்று தென் ஆப்பிரிக்காவின் டெஸ்ட் கேப்டன் டீன் எல்கர் தெரிவித்துள்ளார்.

தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் வருகிற 26-ந்தேதி தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் தென்ஆப்பிரிக்க டெஸ்ட் அணியின் கேப்டன் டீன் எல்கர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறும்போது, இந்திய அணி திறமையான வேகப்பந்திவீச்சாளர்களை கொண்டுள்ளது.

தென்ஆப்பிரிக்காவில் உள்ள ஆடுகளம் மற்றும் சீதோஷ்ண நிலையை இந்திய பவுலர் ஒருவரால் நேர்த்தியாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றால் அது நிச்சயம் ஜஸ்பிரித் பும்ராவாகத் தான் இருக்கும். என்று டீன் எல்கர் கூறினார்.

பொதுவாக இந்திய அணியைப் பற்றி கூறிய டீன் எல்கர், “இந்தியா ஒரு சிறந்த அணி, அனைத்துப் புலங்களிலும் சிறந்து விளங்குகிறது.

அஸ்வின் தரமான பவுலர், இந்தியாவில் உற்பத்தியான சிறந்த ஆஃப் ஸ்பின்னர்களுள் அஸ்வின் ஒருவர்.

அவரை நாங்கள் கருத்தில் வைத்துள்ளோம், இந்தியாவுக்கு எதிராக கடும் சவால் காத்திருக்கிறது.

ஆனால் தென் ஆப்பிரிக்காவில் அவர் பெரிய அளவில் சக்சஸ் ஆனதில்லை. இந்தியாவில் அவர் எங்களை ஆட்டிப்படைத்ததை வைத்துப் பேச முடியாது, இது வேறு அது வேறு.

இந்தியப் பந்து வீச்சு கடும் முன்னேற்றம் கண்டுள்ளது. மிகப்பெரிய பந்து வீச்சு அணி என்பதை கருத்தில் கொண்டுதான் எங்கள் திட்டத்தையே வகுத்துள்ளோம்.

எங்கள் பிட்ச் உள்ளிட்ட சூழ்நிலை எங்களுக்கு பழக்கமானது, எனவே அதை சாதகமான வழிகளில் பயன்படுத்துவோம். எங்களுக்கும் கடினம், எங்கள் பவுலர்களை எதிர்கொள்வதில் இந்தியாவுக்கும் கடினம்” என்றார் டீன் எல்கர்.

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டிசம்பர் 26ம் தேதி தொடங்குகிறது.