5 பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன்கள் ரத்து செய்யப்படும் என்று தேர்தல் நேரத்தில் தி.மு.க. வாக்குறுதி அளித்தது. தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு நகைக்கடன் தள்ளுபடிக்கான பணிகளில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ஈடுபட்டது.
ஏராளமானவர்கள் நகைக்கடன் பெற்று இருப்பதும், முறைகேடு செய்யும் நோக்கத்தில் பலர் நகைக்கடன் பெற்று இருப்பதும் அரசுக்கு தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து நகைக்கடன் தள்ளுபடி பெறுவதற்கான தகுதி குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு மாநிலம் முழுவதும் சரிபார்ப்பு பணி நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து 13 லட்சத்து 47 ஆயிரம் பேர் நகைக்கடன் ரத்து சலுகையை பெற தகுதி உடையவர்கள் என்று தெரிய வந்துள்ளது.