• Fri. Nov 22nd, 2024

பூச்சிக்கொல்லி மருந்துகளிடமிருந்து மக்களை பாதுகாத்த இலங்கை

Jan 15, 2022

இலங்கை, பூச்சிக்கொல்லி மருந்துகளிடமிருந்து ஆயிரக்கணக்கான மக்களை பாதுகாத்திருக்கிறது.

விவசாயத்தை பாதிக்கக்கூடிய பூச்சிகளை அழிப்பதற்காக கொண்டு வரப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகள் தற்போது லாபத்திற்காக செயல்படும் வியாபாரமாக மாறிவிட்டது. சாப்பாட்டுடன் நஞ்சை சேர்த்து சாப்பிட்டு கொண்டிருக்கிறோம். புற்று நோயை ஏற்படுத்தும் என்பதை அறிந்திருந்தும் நிறுவனங்கள் பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்பனை செய்கின்றன.

அதிக மகசூல் வேண்டும் என்பதற்காக விவசாயிகளும் அதனை பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில், இலங்கை அரசு, பூச்சிக்கொல்லி மருந்துகளிடமிருந்து ஆயிரக்கணக்கான மக்களைக் காப்பாற்றியிருக்கிறது என்று ஜெர்மன் நாட்டின் ஒரு ஆய்வில் தெரியவந்திருக்கிறது. பொருளாதாரத்தில் முன்னிலையில் இருக்கும் நாடுகள் குளிரூட்டப்பட்ட அறையில் இருந்து கொண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி பேசி கொண்டிருக்கும் நிலையில், இந்தியா மற்றும் இலங்கை போன்ற நாடுகள் வருங்கால சந்ததிகளை பாதுகாக்கும் முயற்சியை மேற்கொண்டிருப்பதாக அந்த ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

இலங்கை, கடந்த 20 வருடங்களில் ஆபத்து நிறைந்த பூச்சிகொல்லி மருந்துகளை தடை செய்திருக்கிறது. இதன் மூலம், 10 ஆயிரம் உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கிறது. இதேபோல் இந்தியாவில், சில பகுதிகளில் முழுவதுமாக அல்லது அதிகமாக பூச்சிக்கொல்லி மருந்துகள் இல்லாமல் விவசாயம் தொடங்கப்பட்டிருக்கிறது.